தமிழ்
Surah Al-A'la ( The Most High ) - Aya count 19
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
( 1 ) (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
الَّذِي خَلَقَ فَسَوَّىٰ
( 2 ) அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ
( 3 ) மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ
( 4 ) அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
( 5 ) பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ
( 6 ) (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ
( 7 ) அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
( 8 ) அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ
( 9 ) ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
( 10 ) (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى
( 11 ) ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ
( 12 ) அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
( 13 ) பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
( 14 ) தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
( 15 ) மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا
( 16 ) எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
( 17 ) ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ
( 18 ) நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
( 19 ) இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.